முதல்வரின் சுதந்திர தின உரையில் ஏமாற்றம்: மதுவிலக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

முதல்வரின் சுதந்திர தின உரையில் ஏமாற்றம்: மதுவிலக்கு போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக முதல்வரின் சுதந்திர தின உரையில் மதுவிலக்கு தொடர் பான எந்த அறிவிப்பும் இல்லாத தால் மதுவிலக்குக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்து வோம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

பாமக மகளிரணி சார்பாக விழுப் புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று மதுவிலக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியதாவது:

இன்றைய மதுவிலக்குக்கு எதிரான தீவிர போராட்டத்துக்கும் சமூக பிரச்சினையாக மதுவிலக்கு மாறி இருப்பதற்கும் பாமக நிறுவனர் ராமதாஸ்தான் மூல காரணம். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கை வலியுறுத்தி போராடி வரும் ஒரே கட்சி பாமக. மதுவால் 200 நோய்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து மக்களை காப்பாற்ற பூரண மதுவிலக்கு கோரி போராடி வருகிறோம். தமிழகத்தில் மது விற்பனை குறைந்துவிடாமல் அரசு நிர்வாகம் கண்காணிக்கிறது. ஆனால், கல்வி எந்த நிலையில் உள்ளது? கல்வி தரம், மக்களின் சுகாதாரம் போன்றவை குறித்து ஆராய எந்த நிர்வாகமும் இல்லை என்பது வெட்கக்கேடானது.

தமிழக மக்கள் இன்று மதுவிலக் குக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட் டுள்ளனர். இது சமூக பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கெல் லாம் மூல காரணம் பாமக நிறுவ னர் ராமதாஸ் என்பதை அறிய வேண்டும். மதுவிலக்கு போராட்டத் தின் மூலம் அரசியல் ஆதாயம் தேடாத ஒரே கட்சி பாமக. தற்போது, மதுவிலக்குக்காக பல கட்சிகளும் போராட்டம் நடத்துகின்றன. அது, ஓட்டுக்காக நடத்துகிற போராட்டம். மதுவிலக்குக்கு எதிராக பொதுமக் களும் அரசியல் கட்சியினரும் போராடி வரும் நிலையில், சுதந்திர தின உரையில் மதுவிலக்கு அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்த் தோம். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

எனவே, தமிழகத்தில் மதுவிலக் குக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். மதுக்கடை களையும், மது ஆலைகளையும் மூடும்வரை போராட்டத்தை நடத் துவோம். அரசியலுக்காக இந்த மதுவிலக்கு போராட்டத்தை நடத்த வில்லை. மக்கள் நலன் கருதியே இத்தகைய போராட்டத்தில் ஈடுபடு கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in