Published : 10 May 2020 07:02 AM
Last Updated : 10 May 2020 07:02 AM

துபாயில் இருந்து 2 விமானங்களில் 359 தமிழர்கள் சென்னை வந்தனர்- உயிரிழந்தவரின் உடலும் கொண்டு வரப்பட்டது

துபாயில் இருந்து 2 விமானங்கள் மூலம் நேற்று சென்னை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்த மருத்துவப் பணியாளர்கள்.படம்: எம்.முத்துகணேஷ்

சென்னை

துபாயில் இருந்து முதல் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை 12.40 மணிக்கு சென்னைவந்தது. இதில், 151 ஆண்கள், 28 பெண்கள்,3 குழந்தைகள் என 182 பேர் வந்தனர்.

அதிகாலை 1.50 மணிக்கு துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் 138ஆண்கள், 39 பெண்கள் என 177 பேர்வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்திலேயே கரோனா வைரஸ் பரிசோதனைசெய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

இவர்களுடன், துபாயில் கடந்த ஏப்.1-ம்தேதி உயிரிழந்த தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் (56) என்பவரது உடலும் வந்தது. விமான நிலையம் வந்திருந்த தென்காசி மாவட்டவருவாய்த் துறை அதிகாரிகள் உடலைப்பெற்றுக்கொண்டு, அவரது மனைவிசெல்லம்மாளையும் அழைத்துச் சென்றனர். இறுதிச்சடங்கு முடிந்த பின்னர், செல்லம்மாள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்.

இந்நிலையில் சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சிஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் ஹோட்டலில் தங்கியுள்ள பயணிகளை சந்தித்தனர்.அவர்களின் உடல்நலம் குறித்து கண் காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x