

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அனைவரும் பெண்கள். வயதானவர்கள். இதில் 3 பேர் சென்னையிலும் ஒருவர் சிவகங்கையிலும் உயிரிழந்துள்ளனர்
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் சென்னையில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக சென்னையின் எண்ணிக்கை அகில இந்திய அளவில் சில மாநிலங்களின் அளவை விட அதிகமாக உள்ளது.
கரோனா தொற்று இன்றும் சென்னையில் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4 உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் கடந்த மே 1-ம் தேதி கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட 67 வயது பெண் உயிரிழந்தார்.
நேற்றிரவு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்ட 58 வயது பெண் சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.
அதேப்போன்று கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் மே 4 அன்று அனுமதிக்கப்பட்டிருந்த 73 பெண் உயிரிழந்தார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த 70 வயது பெண் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்தார்.