

கோவில்பட்டியில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு வந்த 24 வயது இளைஞரை, காவல் சோதனைச் சாவடியில் இருந்த போலீஸார் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதித்தனர்.
அவரது சளி மற்றும் ரத்தம் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் இன்று அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து வந்த கோவில்பட்டியை சேர்ந்த 65 வயது முதியவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இவர்கள் இருவரும் இன்று மாலை 108 ஆம்புலன்ஸில் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.