

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனியார் லாட்ஜில் தங்கியிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்து பூட்டு, பெல்ட், துணி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (மே 9) கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த லாட்ஜ் முன்பு காவல்துறையினர் தடுப்புக் கட்டைகள் அமைத்து தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்த 10க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டது.