என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர் ரயில் மறியல்

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சியினர் ரயில் மறியல்
Updated on
1 min read

என்எல்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டத்தில் அனைத்துக்கட்சி சார்பில் ரயில் மறியல், முற்றுகை போராட்டம் நடந்தது.

நெய்வேலி என்எல்சி தொழி லாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். தொழிலாளர்களுக்கு ஆதர வாக கடந்த 14-ம் தேதி குறிஞ்சிப் பாடியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடந்தது.

இதில் மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி மந்தாரக் குப்பம், நெல்லிக்குப்பம், பண் ருட்டி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று நெய்வேலி மந்தாரக்குப்பம் பேருந்து நிலை யத்தில் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் ஆயிரக் கணக்கானோர் ஊர்வலமாக நெய்வேலி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்ட செய லாளர் நெடுஞ்செழியன், மார்க் சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறு முகம், பாமக வைத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமார்பன், தேமுதிக ராஜாராம், மதிமுக பிச்சை மற்றும் திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட அனைத்து கட்சியினர் மற்றும் என்எல்சி தொமுச பொதுச் செய லாளர் ராஜவன்னியன், தலைவர் திருமாவளவன், அலுவலக செயலாளர் தரன், பொருளாளர் அண்ணாதுரை உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

இதேபோல சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. சுமார் 500 பேர் சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக சிதம்பரம் ரயில் நிலையம் சென்று சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சி யினர் போலீஸாரை கண்டித்து ரயில் நிலையத்துக்குள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.

கடலூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேரை போலீஸார் கைது செய் தனர். விருத்தாசலத்தில் 350 பெண் கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் விருத்தாசலம் ஜங்ஷனில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். நெல்லிக் குப்பம் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in