

மதுவை தடை செய்தால் பல பிரச்சினைகளைத் தீர்த்துவிடலாம் என்று உறுதியாகக் கூற முடியாது என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லுக்கட்டியில் மெ.மெ.அறக்கட்டளை சார்பில் நடந்த அன்னதானத்தை கார்த்தி சிதம்பரம் எம்பி தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கொள்கை தோல்வி அடைந்துள்ளது.
மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்ற பல பிரச்சினைகளை உருவாக்கும். ஊரடங்கு காலத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டும் மதுக்கடையை திறந்து வைத்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது.
மதுக்கடைகளை 45 நாட்களுக்கு பிறகு திறந்ததால் தான், அதிக கூட்டம் கூடியது. மதுவால் குற்றம் அதிகரித்தது என்று கூற முடியாது.
ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததால் தான் குற்றம் குறைவாக இருந்தது. மதுவைத் தடை செய்தால் பல பிரச்சனைகளை தீர்த்து விடலாம் என்று உறுதியாகக் கூற முடியாது, என்று கூறினார்.