

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற் கெனவே 192 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 75 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 267 ஆனது.
இவர்களில் ஆரணி காவல் நிலையத்தைச் சேர்ந்த 30 வய துடைய காவலர் ஒருவருக்கு பாதிப்பு உறுதியானதால் ஆரணி காவல் நிலையம் நேற்று மூடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கெனவே 89 பேருக்கு கரோனா தொற்று இருந்தது. நேற்று 8 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 26 பேருக்கு கரோனா உறுதியானது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த மாவட்டத்தில் 183 ஆக உயர்ந்தது.