

திருமழிசையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ம் தேதி தற்காலிக மாக மூடப்பட்டது. தொடர்ந்து, பூந்தமல்லி அடுத்த திருமழிசை யில் மாற்று இடம் வழங்கப் பட்டு, தற்காலிக மார்க்கெட் அமைப் பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை காய்கறி மொத்த வியாபாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பின் அமைச்சர்கள் பி.பெஞ்சமின், கே.பாண்டியராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப் பினர் செயலர் கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்து சாமி உள்ளிட்டோர் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை தலைமைச் செயலகத் தில் திருமழிசை தற்காலிக காய் கறி சந்தை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி திரிபாதி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி விளக்கினார்.
தொடர்ந்து, விரைவில் தற் காலிக காய்கறி சந்தையை திறக் கவும் சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி யும் முதல்வர் பழனிசாமி அறி வுரைகளை வழங்கினார்.
முதல்வர் இன்று ஆய்வு
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் இன்று மாலை பணிகளை ஆய்வு செய்ய உள்ள னர். அதன்பின், காய்கறி சந்தை திறப்பு குறித்த முறையான அறி விப்பை அரசு வெளியிட உள்ளது.