

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன மாணவா்கள் மற்றும் பயிற்றுநர்கள் காலால் இயக்கும் கிருமிநாசினி தெளிப்பு கருவியை உருவாக்கி உள்ளனர். அதனை பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருமி நாசினி தெளிப்பானை அனைவரும் தொட்டுப் பயன்படுத்தும்போது நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால் மாணவா்கள் உருவாக்கியுள்ள கிருமி நாசினி தெளிப்பானை கைகளால் தொடாமல், காலால் மிதித்து இயக்கலாம்.
இதன்மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும், என்று கூறினார்.
இக்கருவியை உருவாக்கிய பயிற்றுநா்கள் அழகுராமன், மாரிச்சாமி, மாணவா்கள் அஜய்ரத்தினம், கிருஷ்ணகுமாா் ஆகியோரை துணைவேந்தா் பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் பூ. தா்மலிங்கம், உதவிப் பேராசிரியா் சி. பாலகிருஷ்ணன், பல்கலைக்கழக பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு, ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளா் சஞ்சீவ் குமாா்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.