வெளிமாவட்ட, மாநிலத்தவரை இலவசமாக அனுப்பி வைக்க நடவடிக்கை: நெல்லை ஆட்சியர் தகவல்

வெளிமாவட்ட, மாநிலத்தவரை இலவசமாக அனுப்பி வைக்க நடவடிக்கை: நெல்லை ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெளிமாவட்டத்தினர் மற்றும் வெளிமாநிலத்தவரை இலவசமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் கரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக முகக்கவசங்களை வழங்க வேண்டும். முகக் கவசங்கள் அணிந்தவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க செய்ய வேண்டும்.

வெளிமாநில ,வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கண்டிப்பாக 14 நாட்கள் அவர்கள் வீட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள்.

மாவட்டத்தில் வேலை இல்லாமல் இருக்கும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தவர்களை இலவசமாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வெளி மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகளாக வந்தவர்களும், மாணவர்களும் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். தொழிற்சாலைகளில் வேலை இருந்தும் வெளிமாநிலங்களுக்கு செல்ல நினைக்கும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த செலவில் வாகனங்கள் அமைத்துக் கொண்டு செல்லலாம் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in