

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மேலும் 4 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆகியுள்ளது.
மாவட்டத்தில் நேற்று வரையில் 68 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 58 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருந்தனர். தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலப்பாளையத்தை சேர்ந்த 83 முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இந்நிலையில் பத்தமடையில் ஒரு பெண், வள்ளியூர் சித்தூரில் 2 பேர், மேலப்பாளையத்தில் ஒருவர் என்று மாவட்டத்தில் புதிதாக மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆகியுள்ளது. அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.