Published : 24 Aug 2015 08:31 AM
Last Updated : 24 Aug 2015 08:31 AM

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து ஒரே நாளில் கேரளம் சென்ற 700 டன் காய்கறிகள்

ஓணம் பண்டிகையையொட்டி, ஒட்டன்சத் திரம் மார்க்கெட்டிலிருந்து நேற்று ஒரே நாளில் 700 டன் காய்கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டன.

ஆகஸ்ட் 28-ம் தேதி ஓணம் பண் டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண் டிகையில் அத்தப்பூ கோலத்தைப் போல வீடுகளில் சைவ சமையலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்குள்ள ஹோட்டல்கள், வீடுகளில் ஓணம் பண்டிகையன்று ‘ஓண சத்யா’ விருந்து பரிமாறப்படும். அதில் பொரியல், அவியல், ஓலன், சக்க வரட்டி, எரிசேரி, கிச்சடி, பச்சடி, இஞ்சிக்கறி உட்பட 20-க்கும் மேற்பட்ட காய்கறிகள் மற்றும் அடபிரதமன் உட்பட 3 வகை பாயாசத்துடன் உறவினர்களுக்கு விருந்து வைத்து மகிழ்வர்.

அதனால், ஓணம் பண்டிகையையொட்டி தற்போது தமிழகத்தில் இருந்து கேரளத் துக்கு காய்கறிகள் அதிகளவில் அனுப்பப் படுகின்றன. பொதுவாக ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் 60 சதவீதம் காய்கறிகள் கேரளத் துக்குத்தான் அனுப்பப்படும். தற்போது ஓணம் சீசன் என்பதால் 70 சதவீதம் காய் கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன. நேற்று ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு 1,000 டன் காய்கறிகள் கொண்டு வரப்பட்டன. இதில் 700 டன் காய்கறிகள் கேரளம் சென்றன. இன்றுமுதல் 5 நாட்களுக்கு சுமார் 4,200 டன் காய்கறிகளை கேரளத்துக்கு அனுப்ப வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் தங்கவேலு கூறும்போது, “ஓணம் பண்டிகைக்காக ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 700 டன் முதல் 800 டன் வரை காய்கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்பட உள்ளன. ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் 1,000 டன்னுக்கு மேல் காய்கறிகள் அனுப்ப வாய்ப்புள்ளது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஓரிரு நாளில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x