அதிமுக முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் உடல்நலக் குறைவால் மரணம்

அதிமுக முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் உடல்நலக் குறைவால் மரணம்

Published on

முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் உடல்நல குறைவால் மரணமடைந்தார்.

கன்னியகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த கு.லாரன்ஸ் 1991-ம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

1993 முதல் 1996 வரை வனத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2006ல் திமுகவில் இணைந்த லாரன்ஸ் மாநில சிறுபான்மையினரணி துணை செயலாளராக இருந்து வந்தார்.

உடல் நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், மற்றும் கட்சி பிரமுகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் சொந்த ஊரான தக்கலைக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நாகர்கோலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரன்ஸ் நேற்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 74. தக்கலை கீழகல்குறிச்சி குருசடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லாரன்சிற்கு ஜேசுராஜம் என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in