Last Updated : 08 May, 2020 04:02 PM

 

Published : 08 May 2020 04:02 PM
Last Updated : 08 May 2020 04:02 PM

ராமநாதபுரத்தில் 100 ஏக்கரில் வெற்றிலை விவசாயம் பாதிப்பு: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வெற்றிலை வாங்க ஆளில்லாததால் கொடிகளிலே கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

வறட்சி மாவட்டமான ராமநாதபுரத்தில் வளமான தண்ணீர் வசதியுள்ள திருப்புல்லாணி அருகே முத்துப்பேட்டை, பெரியபட்டிணம், மண்டபம் அருகே தங்கச்சிமடம், புதுமடம், ஆற்றாங்கரை ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.

விழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் தாம்பூலமாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. மூலிகை மருத்துவமாக வெற்றிலை விஷ கடிகள், ஜீரண சக்தி போன்றவற்றிற்கும், பீடாவிற்கும் வெற்றிலை பயன்படுகிறது.

இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் வியாபாரிகளளால் வாங்கிச் செல்லப்படுகிறது. ஊரடங்கால் வெற்றிலை வாங்க ஆளில்லாததால் கொடியிலேயே கருகி வருகின்றன.

அதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்ண்ம் என வெற்றிலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை விவசாயி ஆதலிங்கம் கூறியதாவது, வெற்றிலை சாகுபடிக்கு முன்பு அகத்தி மரம் வளர்த்து, அதில் வெற்றிலைக் கொடியை படரவிடுவோம்.

அது 9 மாதங்கள் கழித்து அறுவடைக்கு வரும். ஒரு முறை பயிரிட்ட கொடிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் வரை வெற்றிலை பறிக்கலாம். ஒரு ஏக்கரில் ஆண்டிற்கு ரூ. 3 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்.

கரோனா ஊரடங்கால் கடைகள் அடைப்பும், திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் நடக்காததாலும் தற்போது வெற்றிலையை விற்க முடியவில்லை. அதனால் கொடியிலேயே காய்ந்து கருகி வீணாகி வருகின்றன.

இதனால் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. வெற்றிலைக் கொடிகளுடன் பயிரிட்டுள்ள அகத்திக் கீரையும் விற்க முடியாததால் அதிலும் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே அரசு வெற்றிலை விவசாயிகளுக்கு கரோனா நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும் வெற்றிலை விற்பனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x