ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்து: முன்னாள் எம்எல்ஏவின் மகன் பலி

ராஜ்கமல்
ராஜ்கமல்
Updated on
1 min read

ஜெயங்கொண்டம் அருகே கார் விபத்தில் முன்னாள் எம்எல்ஏவின் மகன் உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ராமதேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன். இவர் 2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். அப்போது, ஆட்சியை, திமுக கைப்பற்றியதால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனக் கூறி திமுகவில் இணைந்தார்.

இவரது மகன் ராஜ்கமல் (30). இவருக்குத் திருமணமாகி சுமார் 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இவர், தனது வயல்பகுதியில் மீன் பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

இந்நிலையில், இன்று (மே 8) அதிகாலை ராஜ்கமல் தனது காரில் பண்ணையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டார். வீட்டின் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த ராஜ்கமலை அருகிலிருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு ராஜ்கமலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்து குறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in