

திண்டுக்கல் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டதில், முதல்முறை யாக 17 பேருக்கு தொற்று உறுதி யானது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 81 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதில் ஒருவர் இறந்துவிட்டார். 75 பேர் குணமடைந்தனர். 5 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்த திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் வெளிமாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்தனர். சென்னை, கோயம்புத்தூரில் இருந்து சித்தரேவு, செம்பட்டி, சேவுகம்பட்டி கிராமங்களுக்கு வந்தவர்களில் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் திண்டுக்கல் மாவட்டம் மீண்டும் சிவப்பு மண்டலத்துக்கு மாறி விடுமோ என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.