

கரோனா அறிகுறி உள்ளவர்கள், தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கருத்தை சிலர் தவறாக சித்தரிக்க முயற்சி செய் வதாக அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முழு வதும் உள்ள 1.25 லட்சம் குடும்பங்களுக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்வை நன்னிலத்தில் நேற்று தொடங்கி வைத்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரோனா வைரஸ் தொற்று நிவாரணமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக மே மாதத்துக்கான இலவச பொருட்கள் நேற்று(மே 6) மாலை வரை 41 சதவீதம் வழங்கப்பட்டுள்ளன. பக்கத்து மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. இதனால், நம்முடைய பொருளாதாரம் அந்த மாநிலங்களுக்கு சென்றுவிடும் நிலை ஏற்பட்டதால் மட்டுமே, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவத்துக்கு தேவையான அனைத்து வசதிகளும், நோயாளி களை தங்க வைக்க போதுமான இடங்களும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், கரோனா அச்சத்திலிருந்து விடுபடுவதற் காக, கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி கவனித்துக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் சொன்னதை சிலர் வேண்டுமென்றே தவறுதலாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என்றார்.