Published : 08 May 2020 07:45 AM
Last Updated : 08 May 2020 07:45 AM

ஸ்ரீதியாகராஜர் குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்தை திரும்பப் பெற வேண்டும்- ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபா நிர்வாகிகள் வலியுறுத்தல்

ஸ்ரீ தியாகராஜர் குறித்த கருத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்சவ சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர். இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தன் வாழ்நாளில் 96 கோடி முறைராம நாமம் சொல்லி சாதனை புரிந்த மகான் சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள். ‘வால்மீகி முனிவரின் மறுபிறவி’ என்று போற்றப்படும் ஸ்ரீதியாக பிரம்மத்தை திடீரென கமல்ஹாசன் உதாரணமாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உஞ்ச விருத்தி என்பது பிச்சை அல்ல. அது ஒரு பாகவத தர்மம், பக்தி.

ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்தமகான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளைப் பற்றி கமல்ஹாசன் ஒரு செய்தி யாளர் சந்திப்பில் ‘பிச்சை எடுத்தார்’ என்று பேசியுள்ளார். அவர்ஒன்றும் பொருள் சேர்க்க முடியாதவர் அல்ல.

உஞ்ச விருத்தி மூலம் தானியங்களைப் பெற்று பிறருக்கு உணவு அளித்தவர். தஞ்சை மன்னர் சரபோஜி, பொன்னும், பொருளும் அளித்து அரசவைக்கு வருமாறு அழைத்தபோதும் மறுத்து, ராம நாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என்று வாழ்ந்தார்.

செல்வம் தனக்கு இன்பத்தை அளிக்காது என்பதை பல்வேறு கீர்த்தனைகளிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார் என்பதை ஸ்ரீ தியாகபிரம்ம மகோத்சவ சபா சார்பிலும்,இசைக் கலைஞர்கள் சார்பிலும்தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் குறித்து தெரிவித்த கருத்தை கமல்ஹாசன் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

வழக்கறிஞர் நோட்டீஸ்

இதற்கிடையே, ஸ்ரீதியாகராஜர் குறித்து அவதூறாகப் பேசிய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.கே.சேதுராமன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x