

திருமழிசை தற்காலிக சந்தையில் 10-ம் தேதி விற்பனையைத் தொடங்க காய்கறி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசைசந்தையில் போதிய வசதி செய்து கொடுத்தால் மட்டுமே அங்கு விற்பனை மேற்கொள்வோம் என்று வியாபாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காய்கறிகளின் விலை உயர்ந்ததுடன், தட்டுப் பாடும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே கோயம்பேடு சந்தை வியாபாரிகள், சந்தை நிர்வாகத்தை அணுகி, திருமழிசையில் நாளை (மே 10) முதல் விற்பனையைத் தொடங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, நாளைஅதிகாலை 3 மணி முதல் வியாபாரம் செய்வது என மொத்த வியாபாரிகள் முடிவுசெய்துள்ளனர். இந்நிலையில் திருமழிசை சந்தை பணிகளை மாநகரகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆய்வு செய்தார்.