காவிரி ஆணையத்தின் தன்னதிகாரத்தை மீட்க காவிரி டெல்டாவில் கருப்புக் கொடி போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினர்.
Updated on
1 min read

காவிரி உரிமையைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இன்று வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கருப்புக் கொடி ஏந்தி காவிரி உரிமை மீட்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த சில தினங்களுக்கு முன் கொண்டு வந்தது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்துள்ள முடிவினை கைவிட வேண்டும் என்று தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்த முடிவு, மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், மத்திய அரசு இந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று (மே 7) மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை, கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் அவரவர் வீட்டு வாயிலில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து கையில் கண்டன மற்றும் கோரிக்கைப் பதாகைகளையும், கருப்புக் கொடிகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in