

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களை பரிசோதித்தபோது 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குமரியில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23 பேராக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களின் 13 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் குமரியில் இருந்து பணி நிமித்தமாக சென்னை சென்ற சுகாதார பெண் பணியாளருக்கு கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் குமரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதிக்கு பின்னர் குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கரோனா இல்லாமல் இருந்தது. இதனால் ஆரஞ்ச் மண்டலமாக குமரி மாவட்டம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட வெளியூர்களில் இருந்து கடந்த 5 நாட்களில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ளனர்.
இவர்களை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தும் போலீஸார், மற்றும் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் இ பாஸ் போன்றவைகளை சோதனை செய்து சளி மாதிரிகளை பரிசோதனை செய்து வருகின்றனர். இரு நாட்களில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களின் சோதனை முடிவு நேற்று தெரியவந்தது. இதில் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 28 வயது நபர் அறந்தாங்கியை சேர்ந்தவர். 5 வயது பெண் குழந்தை கேரளாவை சேர்ந்தது. மற்ற 4 பேரும் வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டம் வந்தவர்கள்.
5 வயது பெண் குழந்தை கேரளாவை சேர்ந்தது. மற்ற 4 பேரும் வெளியூர்களில் இருந்து குமரி மாவட்டம் வந்தவர்கள். இவர்கள் நாகர்கோவில் வெட்டுர்ணிமடம், ராமன்புதூர், தென்தாமரைகுளம், கல்லுக்கூட்டம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர். வெளியூர்களில் இருந்து வருவோருக்கு கரோனா தொற்று அதிகரித்திருப்பதால் அவர்கள் வசிக்கும் பகுதி, மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தனிமைப்படுத்தி சீல் வைக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர், மற்றும் போலீஸார் ஈடுபட்டனர்.