சமூக இடைவெளியுடன் அமைச்சரின் மகன் திருமணம்

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் வாயிலில் நேற்று சமூக இடைவெளியுடன் நடைபெற்ற அமைச்சர் எஸ்.வளர்மதியின் மகன் திருமணம்.
குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயில் வாயிலில் நேற்று சமூக இடைவெளியுடன் நடைபெற்ற அமைச்சர் எஸ்.வளர்மதியின் மகன் திருமணம்.
Updated on
1 min read

மாநில பிற்படுத்தப்பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியின் மகன் ஹரிராம் மற்றும் சூரியபிரபா ஆகியோருக்கு ஏற்கெனவே நிச்ச யதார்த்தம் முடிந்திருந்தது.

மே 3-ம் தேதி ஊரடங்கு முடிந்த பிறகு திருமணம் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்த நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது.

இதனால் திருமணத்தைத் தள்ளிவைக்க விரும்பாத மணமக்க ளின் பெற்றோர், திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.

இதன்படி, திருச்சி மாவட்டம் குணசீலம் பிரசன்ன வேங்கடா சலபதி பெருமாள் கோயிலின், பூட்டப்பட்டிருந்த வாயிலின் முன் கோயிலின் பரம்பரை அறங் காவலர் பிச்சுமணி அய்யங்கார் தாலியை எடுத்துக் கொடுக்க சமூக இடைவெளியுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்கள் உட்பட திருமணத்தில் பங்கேற்ற அனை வரும் சமூக இடைவெளியைப் பின் பற்றினர். முன்னதாக, அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்த துடன் கிருமிநாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்துகொண்ட னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in