

மாநகராட்சி அனுமதி அளித்த தைத் தொடர்ந்து சென்னையில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தவிர்த்து இதர தனிக் கடைகள்நேற்று திறக்கப்பட்டன. அதே நேரம் அந்தக் கடைகளில் ஏசி இயக்க மாநகராட்சி தடை விதித் துள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சில தளர்வு களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும்கடைகள் காலை 6 முதல் மாலை5 மணி வரை செயல்படலாம். மேலும் ஹார்டுவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள் காலை11 முதல் மாலை 5 மணி வரைசெயல்பட அனுமதிக்கப்பட்டுள் ளது. அதேநேரம் கரோனா தொற்று காரணமாக சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வுகள் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே வளாகத்துக்குள் இல்லாத தனிக் கடைகளான டீ கடைகள், கடிகாரம் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், மீன் தொட்டி மற்றும் பறவைகள் விற்பனை கடைகள், துணி கடைகள் ஆகியவற்றை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதா என தெரியாமல் அக்கடை வியாபாரிகள் குழப்பமடைந்தனர்.
இந்நிலையில், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் தவிர்த்து அனைத்து தனிக் கடைகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் வளாகங்களில் உள்ளகடைகள், மால்களுக்கு அனுமதிஇல்லை. மேலும் இந்த தனி கடைகளில் ஏசி வசதி இருந்தால் அதை பயன்படுத்தக்கூடாது என்றும், ‘ஏசி பயன்படுத்தவில்லை’ என்ற வாசகத்தை எழுதி பொதுமக்கள் கண்ணில் படும்படி வைக்க வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவைத் தொடர்ந்துசென்னையில் சீல் வைக்கப்பட்டபகுதிகள் தவிர பிற பகுதிகளில் பெரும்பாலான கடைகள் நேற்றுதிறக்கப்பட்டன. தி.நகரில் ரங்கநாதன் தெருவை தவிர்த்து பிறபகுதிகளில் உள்ள கடைகள் திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் வெளியில் வருவதும் நேற்று அதிகரித்திருந்தது.
அதிகாரிகள் ஆய்வு
சென்னையில் நேற்றைய நிலவரப்படி 2,008 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் வசிக்கும் 357 இடங்களில் மாநகராட்சி சீல் வைத்துகண்காணித்து வருகிறது. சென்னையில் கரோனா பரவலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள 46 சிறப்பு அதிகாரிகளும் நேற்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.