

வருங்கால வைப்பு நிதியத்தில் கரோனா காலத்திற்கான சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் 40826 பேர் ரூ.481.63 கோடி முன்பணம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சு.சிவசண்முகம் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா பெருந்தொற்றை சமாளிக்க வருங்கால வைப்புநிதி திட்டத்தில் உறுப்பினர்கள் திரும்ப செலுத்தாமல் பணம் எடுக்கும் திட்டம் 28.3.2020-ல் அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தில் வருங்கால வைப்ப நிதி உறுப்பினர்கள் தங்களது 3 மாத அடிப்படை சம்பளத்துடன் விலைவாசிப்படியும் சேர்த்து வரும் தொகை அல்லது அவர்களின் வைப்பு நிதி கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 75 சதவீதம் இவற்றில் எது குறைவோ அதை திரும்ப செலுத்தா முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தில் முன்பணத்துக்கு விண்ணப்பித்த 40 ஆயிரத்து 826 பேருக்கு ரூ.481.63 கோடி முன்பணம் வழங்கப்பட்டுள்ளது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மட்டும் 3255 பணியாளர்கள் ரூ.84.44 கோடி முன்பணம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.