மதுரையில் ஒரே நாளில் 20 பேருக்கு கரோனா: அச்சத்தில் மக்கள்; அதிர்ச்சியில் சுகாதாரத்துறை
மதுரையில் இன்று ஒரே நாளில் 20 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்று வரை 91 பேருக்கு ‘கரோனா’ வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில், மாநகராட்சியில் மட்டும் 57 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சையில் இருந்தவர்களில் இதுவரை 2 பேர் உயிரிழந்தநிலையில் நேற்று வரை 48 பேர் குணமடைந்துவீட்டிற்கு திரும்பியுள்ளனர். தற்போது 41 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 2 பேருக்கு மூச்சு திணறல் இருப்பதால் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
மற்ற நோயாளிககள் சீரான உடல்நிலையில் ஆரோக்கியமாக உள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார்கள் என்று ‘டீன்’ சங்குமணி தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் புதிதாக 20 பேருக்கு ஒரே நாளில் ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 12 பேர் மாநகராட்சிப்பகுதிகளை சேர்நதவர்கள். மீதி 8 பேர் புறநகர் பகுதி கிராமங்களை சேர்ந்தவர்கள்.
அதனால், மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
