சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்ற எஸ்டேட் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்றபோது, அடவிநயினார் அணை அருகே தடுத்து நிறுத்தப்பட்ட  எஸ்டேட் தொழிலாளர்கள்.
தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல முயன்றபோது, அடவிநயினார் அணை அருகே தடுத்து நிறுத்தப்பட்ட எஸ்டேட் தொழிலாளர்கள்.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், மேக்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஏலக்காய், கிராம்பு எஸ்டேட்களில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். ​

ஊரடங்கு அமல்படுத்தப் பட்டதால், எஸ்டேட் தொழிலா ளர்கள் பலர், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அங்கிருந்து நடந்து வந்தனர். சுமார் 8 கி.மீ. நடந்து அட விநயினார்கோவில் அணை அருகே வந்தனர். தகவல் அறிந்த அச்சன்புதூர் காவல் ஆய்வாளர் மனோகரன், செங்கோட்டை வட்டா ட்சியர் கங்கா உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று, அவர் களுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 31 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலா ஒருவர் மற்றும் வேலூர் மாவட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் 5 பேர் என மொத்தம் 74 பேர் இருந்தனர். தற்போதைய சூழ லில் சொந்த ஊர் பயணத்தை தவிர்க்கும்படி அறிவுறுத்திய அதிகாரிகள், அவர்களை தனியார் மண்டபத்தில் தங்க வைத்து உணவுக்கு ஏற்பாடு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in