

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டி லுள்ள அனைத்து டாஸ்மாக் கடை களும் மூடப்பட்ட நிலையில், சென்னை மற்றும் கரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் மே 7-ம் தேதி(நாளை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழ் நாடு அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து சுமார் 43 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மதுக்கடைகளை திறப்பதற்கான பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. குடோன்கள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில் களை மீண்டும் டாஸ்மாக் கடைக ளுக்கு கொண்டு செல்லும் பணி கள் தொடங்கியுள்ளன.
இதற்கிடையே, கடைகளில் அதிக கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச் சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து மாவட்ட போலீஸாருடன் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் வட்டாரத்தினர் கூறியது:
நீண்ட நாட்களுக்குப் பிறகு திறக்கப்படுவதால் அதிகமானோர் கூடுவதைத் தடுக்க அனைத்து கடைகளிலும் காவல் துறை மற்றும் ஊர்க்காவல் படையினர் நிறுத்தப்பட உள்ளனர். கடை அமைந்துள்ள இடத்துக்கு தகுந் தாற்போல 100 அல்லது 200 மீட்டர் வரை வரிசையாக வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படும்.
100 அல்லது 200 மீட்டருக்கு அப்பால் மதுப்பிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு வரி சைப்படி டோக்கன் அளிக்கப்படும்.
அதைப் பெற்றுக்கொண்ட வர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து டாஸ்மாக் கடைக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும்.
முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் யாரேனும் வந்தால், அவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் அதிகாரி களுக்கு அறிவுறுத்த உள்ளோம் என்றனர்.