படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தல்

படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: முதல்வருக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா வலியுறுத்தல்
Updated on
1 min read

படிப்படியாக மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்ற ஜெயலலி தாவின் வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இணையம் வழியாக திருச்சி செய்தியாளர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சரியான நேரத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக இந்தி யாவில் கரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் தமிழ் நாட்டில் படிப்படியாக மது விலக்கு அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறி யிருந்தார். அவரது வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வரும் மே 7-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற உத்தரவை முதல்வர் பழனிசாமி வாபஸ் பெற வேண்டும். மதுவை முற்றி லும் ஒழித்து தமிழ்நாட்டில் ஜெய லலிதா ஆட்சி நடக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும்.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் கரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைவு. ஆனால் சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சில இடங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித் துவிட்டது என்றார்.

இதேபோல தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோயம்பேட்டில் தொடங்கி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்ததன் மூலம், கரோனா வைரஸ் பரவலை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர முடியாத பேராபத்து ஏற்படும் என்பதால், மே 7-ம் தேதி(நாளை) மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in