மே 10-ம் தேதி வரை காய்கறி வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம்: கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

மே 10-ம் தேதி வரை காய்கறி வியாபாரத்தில் ஈடுபட மாட்டோம்: கோயம்பேடு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
Updated on
1 min read

மே 10-ம் தேதி வரை காய்கறிவியாபாரத்தில் ஈடுபட மாட்டோம் என்று கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜ சேகர் அறிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையில் கரோனா பரவியதைத் தொடர்ந்துகோயம்பேடு சந்தை திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றம்செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜனை கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் நேற்று சந்தித்து கோரிக்கை வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருமழிசையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி, தொழிலாளர்கள் தங்குவதற்கான வசதி, கழிப்பறை உள்ளிட்டவற்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். எனவே, இம்மாதம் 10-ம் தேதி வரை 5 நாட்களுக்கு காய்கறி விற்பனையில் ஈடுபடப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.

தற்போதைக்கு வியாபாரி கள் அடங்கிய 7 பேர்கொண்ட கமிட்டியை அமைத்துள்ளோம். இந்த கமிட்டியை அழைத்துச் சென்று ஆய்வு செய்து அனைத்து வசதிகளையும் உறுதிப்படுத்தினால்தான் திருமழிசையில் வியாபாரத்தை தொடங்குவோம். திருமழிசை செல்வதில் வியாபாரிகளிடையே கருத்து வேறுபாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, சிஎம்டிஏ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,“திருமழிசையில் வியாபாரிகளுக்கு தேவையான அனைத்துவசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in