Last Updated : 05 May, 2020 09:22 PM

 

Published : 05 May 2020 09:22 PM
Last Updated : 05 May 2020 09:22 PM

அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிய நிவாரண அரிசி மூட்டையில் 'நாளைய முதல்வர்' வாசகத்தால் சர்ச்சை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நிவாரணமாக வழங்கிய அரிசி மூட்டையில் அவரது பெயருக்கு அருகே 'நாளைய முதல்வர்' என்ற வாசகத்தோடு சமூக வலைதளங்களில் படங்கள் வைரலாவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிவாரணமாக ஒரு அரிசி மூட்டை வீதம் வழங்கும் பணியை 2 தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அந்த மூட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது படங்களுடன் இவரது படமும் இடம் பெற்றிருந்தது.

அந்த அரிசி மூட்டை படத்தில் உள்ள அவரது பெயருக்கு அருகே 'நாளைய முதல்வர்' என கிராஃபிக்ஸ் செய்த படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலின் தொடக்கத்தில் இதைப்பற்றி அடிக்கடி பதிவிட்டு வந்த வீடியோ பதிவுகளை அவரது ஆதரவாளர்களைக் கொண்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வந்தது அதிமுகவுக்குள்ளேயே சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில், தற்போது அமைச்சரின் நிவாரண அரிசி மூட்டை படத்தில் 'நாளைய முதல்வர்' என கிராஃபிக்ஸ் செய்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது அதிமுகவினருக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x