

கொடைக்கானல் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட் டுள்ள நக்சலைட் நீலமேகத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞ்ச் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
நீலமேகத்தின் பின்னணியில் தலைமறைவான நக்சலைட்டுகள் கொடைக்கானல் கிராமங்களில் தலைமறைவாக வாழ்ந்து வரலாம் என சந்தேக எழுந்துள்ளது. தமிழகத்தில் ஆரம்ப காலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகளவு இருந்தது. 2004-ம் ஆண்டு ஊத்தங்கரை சின்ன கனக்கம்பட்டியில் நக்சலைட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், நக் சலைட்டுகளுக்கும் நடந்த துப்பாக் கிச்சூடு சம்பவத்தில் சிவா என்ற பார்த்திபன் கொல்லப்பட்டார். 12 நக்சலைட்டுகளை போலீஸார் கைது செய்தனர்.
நக்சல் பாதிப்புள்ள கிராமங் களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை போலீஸார் ஏற் படுத்தி அவர்கள் நக்சல் இயக் கங்களில் சேருவதைத் தடுத்தனர். இதையடுத்து தருமபுரி, கிருஷ்ண கிரி மாவட்டங்களில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் நெருக்கடி யால் அங்கிருந்த நக் சலைட்டுகள் கேரளத்தை ஒட்டிய திண்டுக்கல், தேனி மேற்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களில் இடம்பெயர்ந்தனர். இங்குள்ள மலைக்கிராமங்களில் கேரள நக்சலைட்டுகளுடன் கைகோத்து, கடந்த காலத்தில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு கொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட நக்சலைட்டுகளுக்கும், அங்கு சென்ற போலீஸாருக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற் றது. இதில் நக்சலைட் நவீன் பிரசாத் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற 9 நக்சலைட்டுகள் தலை மறைவாகினர். அதன்பின் போலீ ஸார் நடத்திய தேடுதல் வேட்டை யில் சமீபத்தில் கோவையில் கண்ணன், ரஞ்சித் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும், ஒரு பெண் நக்சலைட் உட்பட 5 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர் களை போலீஸார் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தேடப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறையைச் சேர்ந்த நக்சலைட் நீலமேகத்தை நேற்று முன்தினம் இரவு போலீஸார் செய்தனர். அவர், கடந்த சில ஆண்டுகளாக வடமதுரையில் பதுங்கியிருந்து சாதாரண மக்களோடு மக்களாக தலைமறைவாக வாழ்ந்து இளை ஞர்களை நக்சல் இயக்கங்களில் சேர முயற்சி செய்து வந்துள் ளார். அதனாலே, சமீப காலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலை மறைவு நக்சலைட்டுகள் கொடைக் கானல் மலைக் கிராமங்களில் இருப் பதாக கியூ பிராஞ்ச் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனால், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீலமேகத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கியூ பிராஞச் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.