Published : 05 May 2020 07:19 AM
Last Updated : 05 May 2020 07:19 AM

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறிய சித்த மருத்துவர் தணிகாசலம் மீது தமிழக சுகாதாரத் துறை புகார்- மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை

சென்னை

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பிய சித்த மருத்துவர் மீது சுகாதாரத் துறை சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

கரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் அல்லது மருத் துவக் கல்வி இயக்குநர் அல்லது ஊரக மருத்துவம், சுகாதாரப் பணி கள் இயக்குநர் அல்லது மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி யின்றி தகவல் பரப்புதல் The Epidemic Diseases Act and Regu- lations பிரிவு 8-ன்படி தடை செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் கரோ னாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, தணிகாசலம் என்பவர் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பி வந்தார். பொது மக்கள் நல னுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத் தில் செயல்பட்டு வருவதால், போலி சித்த மருத்துவர் திருத்தணி காசலம் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, சட்டரீதி யாக நடவடிக்கை எடுக்க, இயக்கு நர், இந்திய மருத்துவம், ஹோமி யோபதி துறை சார்பில்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின்பேரில் தணிகா சலத்திடம் சென்னை மத்திய குற் றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x