உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் கருவிகள் நிறுவி மின் உற்பத்தி: தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு பணிகள் தீவிரம்

உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் 13 மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் கருவிகள் நிறுவி மின் உற்பத்தி: தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு பணிகள் தீவிரம்
Updated on
1 min read

சென்னையில் உயர்மட்ட பாதை வழியாக இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் கருவிகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இதற் காக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு பணிகளை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இரு வழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையிலும், கோயம்பேட் டில் இருந்து பரங்கிமலை வரையிலும் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், தற்போது ஆலந்தூரில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல், அசோக்நகர், வடபழனி, அரும் பாக்கம், சிஎம்பிடி வழியாக கோயம்பேடுக்கு உயர்மட்ட பாதை வழியாக தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஒட்டுமொத்தமாக உயர்மட்ட பாதையில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் கருவிகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினர் மேற்கொண்டு வரு கின்றனர்.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

ரயில்வே வாரியம் விரைவு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங் களில் சோலார் கருவிகளை அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில் லாமல், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மற்ற மாநகரங்களில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் சோலார் மூலம் மின்உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன.

சென்னையில் உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆலந்தூர் கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப் பட்டுள்ளன. எனவே, உயர்மட்ட பாதையில் அமையவுள்ள 13 ரயில் நிலையங்களிலும் சோலார் கருவிகள் பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள் ளோம். இத்திட்டத்திற்கான தொகை எவ்வளவு, தற்போதுள்ள மேற் குடைகளின் தரம் போதுமானதா? எதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? சோலார் மின் உற்பத்தியை மெட்ரோ ரயில் நிலையங்களில் எவ்வாறு பயன் படுத்துவது? மின்இணைப்பு வசதிகள், அரசுகளின் மானிய தொகை எவ்வளவு கிடைக்கும்? உள்ளிட்டவை குறித்து தொழில் நுட்ப குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வுகளின் முடிவு கொண்டு புதிய திட்டம் தயாரித்து சோலார் கருவிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in