ஆந்திராவில் இருந்து பைக்கில் கோவில்பட்டிக்கு வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஆந்திராவில் இருந்து பைக்கில் கோவில்பட்டிக்கு வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
Updated on
1 min read

ஆந்திராவில் இருந்து ஒரே பைக்கில் வந்த 3 பேரை கோவில்பட்டி போலீஸார் தடுத்து நிறுத்தி அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஜெரின்(34), அரவிந்த்(24), ஜெலில்(25) ஆகியோர் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் டவர் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஊரடங்கு அமல் 40 நாட்களையும் கடந்து தொடருவதால், அவர்கள் கடந்த 2-ம் தேதி சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்து, ஒரே மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

ஆந்திரா - தமிழக எல்லையை கடந்து நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி தோட்டிலோவன்பட்டியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையை அடைந்தனர். அங்கிருந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

உடனடியாக அவர்கள் 3 பேரையும் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரின் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் 3 பேரும் தமிழக எல்லை மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களில் இருக்கும் சோதனைச்சாவடிகளை கடந்து வந்துள்ளனர். எனவே, சோதனைச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, இதுபோன்று வெளிமாநிலத்தில் இருந்து வருவோரை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in