கரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு தினமும் 2 வாழைப்பழம்: தூத்துக்குடி மாநகராட்சியில் தொடக்கம்

கரோனா தடுப்புப் பணியாளர்களுக்கு தினமும் 2 வாழைப்பழம்: தூத்துக்குடி மாநகராட்சியில் தொடக்கம்

Published on

தூத்துக்குடியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு தினமும் இரண்டு வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

ஊரடங்கால் நஷ்டத்தை சந்தித்துள்ள வாழை விவசாயிகளுக்கு உதவும் வகையிலும், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களை உற்சாகமூட்டும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் அலுவலர்கள் முதல் தூய்மை பணியாளர்கள் வரையிலான 2000 பேருக்கு தினமும் 2 வாழைப்பழங்கள் வழங்கும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

பணியாளர்களுக்கு வாழைப்பழங்களை வழங்கி இந்த திட்டத்தை மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

கரோனா தடுப்பு பணிகள் முடியும் வரையில் பணியாளர்களுக்கு தினமும் 2 வாழைப்பழங்கள் வழங்கப்படும்.

இதற்காக விவசாயிகளிடம் இருந்து வாழைத்தார் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in