சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு கரோனா தொற்று 

சென்னையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு கரோனா தொற்று 
Updated on
1 min read

கோயம்பேடு பணியில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் இருந்த காவலர்களும், ஓட்டுநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலேயே சென்னையில்தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

சென்னையில் தினம் 100 பேருக்கு மேல் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் தொற்றுப் பரவலின் பாதிப்பு சென்னையின் பல இடங்களில் தெரிகிறது. இதன் காரணமாக மற்ற மாவட்டங்களுக்கும் கரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் கோயம்பேடு சந்தைப் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்ட 2 உதவி ஆய்வாளர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வியாபாரிகளுக்கும் தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில் இதன் உச்சகட்டமாக சென்னையின் கரோனாவின் ஹாட் ஸ்பாட்டாக கோயம்பேடு சந்தையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பாதுகாப்புப் பணிக்கு அடிக்கடி கோயம்பேடு சந்தைப் பகுதிக்குச் சென்று வந்த நிலையில் அவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது ஓட்டுநர், தனிக்காவலர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், முன்னணிப் பணியில் உள்ள மருத்துவர்கள், காவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in