விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தினமும் 3,000 பேருக்கு மதிய உணவு

திமுக சார்பில் நல்லோர் கூடம் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளரான பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்.
திமுக சார்பில் நல்லோர் கூடம் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளரான பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைக்கிறார்.
Updated on
1 min read

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தினமும் 3,000 பேருக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க விழுப்புரத்தில் இன்று (மே 4) 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து ஒருவேளை உணவுக்காக அல்லாடும் ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு அளிக்கும் நல்லோர் கூடம் திட்டத்தை விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக, விழுப்புரம் வள்ளலார் சன்மார்க்க சங்கம், உணவக உரிமையாளர்கள் சங்கம், சேம்பர் ஆஃப் காமர்ஸ் மற்றும் சமூக நல அமைப்புகள் சேர்ந்து தினமும் 3,000 பேருக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தினமும் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த சுமார் 3,000 பேருக்கு மதிய உணவு வழங்கப்படும் என பொன்முடி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டப் பொருளாளர் ஜனகராஜ், சன்மார்க்க சங்கத் தலைவர் அண்ணாமலை, ஒட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் சுப்புராமன், சேம்பர் ஆஃப் காமர்ஸ் சங்கச் செயலாளர் பிரேம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in