Last Updated : 09 Aug, 2015 10:24 AM

 

Published : 09 Aug 2015 10:24 AM
Last Updated : 09 Aug 2015 10:24 AM

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக புதிய நீராதாரங்களை தேடும் தண்ணீர் லாரிகள்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் லாரிகள், புதிய நீராதாரத்தை தேடிவரு கின்றன.

சென்னையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் லாரிகளின் பயன்பாடு அதி கரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரிய லாரிகள், தனியார் லாரிகள் என 1500க்கும் மேற்பட்ட லாரிகள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. இவை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகளையே பெரிதும் நம்பியுள்ளன.

தென் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் லாரிகள் மேடவாக்கம் முதல் திருப்போரூர் வரையில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீரை எடுத்து வருகின்றன. வட சென்னைக்கு நீர் வழங்கும் லாரிகள் செந்நீர்குப்பம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீரை பயன்படுத்தி வருகின்றன.

இப்பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் புதிய இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.நிஜலிங் கம் இதுபற்றி கூறும்போது, “தண் ணீர் தட்டுப்பாடு காரணமாக தினமும் பத்து ட்ரிப்களை அடிக்கும் லாரிகள் ஏழு அல்லது எட்டு ட்ரிப்கள்தான் செல்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள வெண்பேடு, ஈச்சங்காடு, காயாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து இந்த ஆண்டு புதிதாக நீர் எடுக்கிறோம்” என்றார்.

சென்னை தனியார் தண்ணீர் டாங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை குடிநீர் வாரிய லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தின் தலைவர் பி.எஸ்.சுந்தரம் கூறும் போது, “தட்டுப்பாடு அதிகரித்துள்ள தால் புதிய இடங்களை தேடி வரு கிறோம். திருமழிசை, காரணோடை உள்ளிட்ட பகுதிகளில் இந்த முறை நீர் எடுக்க ஆரம்பித்துள்ளோம். விவ சாய கிணறுகளிலிருந்து கட்டணம் செலுத்தி நீர் எடுக்கிறோம்” என்றார்.

சென்னை குடிநீர் வாரியம் சமீபத் தில் தனியார் தண்ணீர் லாரிகளுக்கு அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித் தது. அதன்படி 20 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,200 மற்றும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,200 வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த கட்டணம் மிகவும் குறைவு என்று லாரி உரிமையாளர் கள் கூறுகின்றனர். தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமை யாளர் சங்கத்தின் தலைவர் என்.நிஜ லிங்கம் இதுபற்றி கூறும்போது, “விவ சாயிகளுக்கு தர வேண்டிய தொகை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாலும், அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதாலும், வாடிக்கை யாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது”என்றார்.

போக்குவரத்து நெரிசல்

பெரும்பாலான தண்ணீர் லாரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதால் பல்லா வரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. உட்புறச் சாலைகள் குறுகலாக உள்ள பகுதிகளில் தண்ணீர் லாரி நிறுத்தப் பட்டிருந்தால் வேறு எந்த வாகன மும் செல்ல முடியாத நிலை உள் ளது. மடிப்பாக்கத்தில் வசிக்கும் சுப்ரமணியன் இதுபற்றி கூறும் போது, “தண்ணீர் லாரிகள் சாலையை மறித்துக் கொண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் நீர் நிரப்புகின்றன. அவை தண்ணீர் நிரப்பி முடிக்கும் வரை பின்னால் உள்ள வாகனங்கள் நின்றுக் கொண்டே இருக்கவேண்டி உள்ளது” என்றார்.

புழுதிவாக்கத்தை சேர்ந்த செந் தில் கூறும்போது, “தண்ணீர் லாரி வரும் என்பதற்காகவே வண்டி களை ஓரமாக நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இல்லையென் றால், எதிரில் நிற்கும் வண்டிகளை இடித்து விட்டு நிற்காமல் செல்கின்றன” என்றார்.

லாரி தண்ணீர் வேண்டி பதிவு செய்பவர்களுக்கு பல நாட்களுக்கு பிறகே குடிநீர் கிடைப்பதாக பொது மக்கள் கூறுகின்றனர். மேற்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த ராஜலக்‌ஷ்மி இதுபற்றி கூறும் போது, “பதிவு செய்து நான்கு நாட் கள் கழித்துதான் தண்ணீர் கிடைக் கிறது. ஆழ்துளை கிணறுகளில் கிடைக்கும் நீர் அரை நாளுக்கு கூட போதவில்லை”என்றார்.

விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாலும், அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதாலும், வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x