

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய் தாக்கத்தில் நேற்று முன் தினம் 53 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் 418 பேர் வரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் 33 பேருக்கு நேற்று தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 53 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் தோற்று அறிகுறியுடன் 106 பேர் வரை மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். கோயம்பேடு திரும்பியதில் தொற்று ஏற்பட்ட வரின் உறவினர்கள் மீட்கப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.