Last Updated : 03 May, 2020 06:18 PM

 

Published : 03 May 2020 06:18 PM
Last Updated : 03 May 2020 06:18 PM

காரைக்குடியில் 200 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 200 குடும்பங்களுக்கு தலா 20 கிலோ அரிசி, மளிகை பொருட்களை வழங்கினர்.

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படை 4-வது பட்டாலியன் உள்ளது. அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கரோனா மருத்துவமனையாக மாற்ற அனுமதித்தனர்.

இந்நிலையில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் வேடா நகரைச் சேர்ந்த 100 நரிக்குறவர் குடும்பங்கள், மீனாட்சிபுரத்தில் உள்ள 100 ஏழைகளுக்கு தலா 20 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், சோப்பு என ரூ.1,000 மதிப்புள்ள பொருட்களை வீரர்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கமாண்டன்ட் கிளாரி, டிஎஸ்பி அருண், வட்டாட்சியர் பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், அமிர்ந்தசிங், பிரின்ஸ், முகேஸ்குமார், ரேணுகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* சிவகங்கை அருகே சித்தாலங்குடியில் உள்ள தமிழ்நிலா ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை பண்ணை சார்பில் 200 ஏழைகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றை அப்பண்ணையில் உரிமையாளர் குமரேசனின் தந்தை முனியாண்டி, கோட்டாட்சியர், வட்டாட்சியர் மைலாவதி வழங்கினார்.

:::::

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x