மதுரை அருகே ஊருணியை சுத்தம் செய்த இளைஞர்கள்: ஊரடங்கிலும் நடந்த சேவையால் கிராமத்தினர் பாராட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி ஊருணியை சுத்தம் செய்த இளைஞர்கள்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி ஊருணியை சுத்தம் செய்த இளைஞர்கள்.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது கரிசல்பட்டி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப் பட்டுள்ள ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.

தினமும் மாலை சமூக இடை வெளியைப் பின்பற்றி கிராமத்து ஊருணியில் சந்தித்துக் கொள்வர். அப்போது மண்மூடியுள்ள ஊர ணியை தூர்வாரி சுத்தப்படுத்தவும், மரங்களை நட்டு பராமரிக்கவும் திட்டமிட்டனர். அதை சரியாக செய்து முடித்தனர்.

இது குறித்து கரிசல்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த கருணாநிதி மற் றும் இளைஞர்கள் கூறியதாவது:

தினமும் காலை, மாலை முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி ஊருணி, சுற்றியுள்ள பகுதியை சுத்தப்படுத்தினோம். இப்பணியில் 18-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தொடர்ந்து 15 நாட்கள் ஈடுபட்டோம். தற்போது ஊருணி முழுமையாகத் தூர்வாரப்பட்டு, சுத்தமாக்கப்பட்டது. மழை பெய்து ஊருணிக்குத் தண்ணீர் வந்தால் கிராமத்துக்குப் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும். டி.கல்லுப்பட்டியில் இருந்து புங்கை, வேம்பு, பூவரசு போன்ற மரக்கன்றுகளை வாங்கி வந்து ஊருணியைச் சுற்றி நேற்று முன்தினம் நட்டுள்ளோம். செடிகள் வாடிவிடாமல் இருக்க, தண்ணீர் ஊற்றி மரமாகும் வரை காப்பாற்றுவோம் என்றனர்.

ஊரடங் கின்போது பயனுள்ள வகையில் செயலாற்றிய இளைஞர்களை கிராமத்தினர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in