

மதுவிலக்கை வலியுறுத்தி தேமுதிக சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதனால், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜய காந்த், அவரது மனைவி பிரேம லதா, இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ் உட்பட தமிழகம் முழுவதும் ஏராள மானோர் கைது செய்யப்பட்டனர்.
விஜயகாந்த் கைது செய்யப் பட்டதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.