Published : 02 May 2020 07:53 AM
Last Updated : 02 May 2020 07:53 AM

காவிரி மேலாண்மை வாரிய விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்துவதா?- ஸ்டாலின், துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் விஷயத்தில் தேவையற்ற குழப் பத்தை ஏற்படுத்தி, அரசியல் லாபம் தேடும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது:

காவிரி நதி நீர் பிரச்சினைகளில் அதிமுக அரசின் சாதனைகளையும் திமுகவின் துரோகங்களையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். காவிரி நடுவர் மன்றம் 2007-ல் இறுதி ஆணை பிறப்பித்தபோது, அதை மத்திய அரசிதழில் வெளியிட சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.

2011-ம் ஆண்டு முதல்வ ராகப் பொறுப்பேற்ற ஜெயல லிதா நடத்திய சட்டப் போராட் டங்களால்தான் 2013-ல் வெளியி டப்பட்டது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகளால்தான் சிவில் முறையீட்டு வழக்குகளின் மீது 2018-ல் இறுதித்தீர்ப்பு பெறப் பட்டது.

இதைத் தொடர்ந்துதான் காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

மத்திய அரசு கடந்த ஏப்.24-ம் தேதி வெளியிட்ட அரசி தழில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஜல்சக்தி அமைச்ச கத்தின் கீழ் சேர்த்துள்ளது.

உண்மை நிலை அறிந்தும் அர சியல் ஆதாயத்துக்காக மக்களை திசை திருப்ப ஒரு அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

இது வழக்கமான அலுவலக நடைமுறையே, இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது என்று மத்திய ஜல் சக்தி துறை செயலர் யு.பி.சிங் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணை யத்தின் தன்னாட்சிப் பணிகளில் ஜல் சக்தி அமைச்சகம் தலையி டுவதற்கு வாய்ப்பில்லை என்பதை வழக்கறிஞர்களும் உறுதிப்படுத்தி யுள்ளனர்.

காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகள் நலனுக்காக எடுக்கும் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தேவையற்ற குழப் பத்தை ஏற்படுத்தி, தங்கள் சுயநலத்துக்காக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. விவசாயிகளின் நலன்களையும், தமிழகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x