மே 3-க்குப் பிறகு என்னென்ன நடவடிக்கைகள்? - முதல்வரிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது வல்லுநர்கள் குழு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக அரசு அமைத்த 17 பேர் கொண்ட வல்லுநர் குழு, தனது இடைக்கால அறிக்கையை முதல்வரிடம் இன்று சமர்ப்பித்தது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 1) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா தடுப்பு நடவடிக்கையாக 24.3.2020 முதல் 3.5.2020 வரை தமிழ்நாடு அரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மே 3 -ம் தேதிக்குப் பிறகு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை வகுக்க, தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) எஸ்.கிருஷ்ணன், ஐஏஎஸ் தலைமையில் 17 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு, சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளிடம் கலந்தாலோசித்து, தனது இடைக்கால அறிக்கையை இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வரிடம் சமர்ப்பித்தது.

அப்போது, தலைமைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ், கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை) அதுல்ய மிஸ்ரா ஐஏஎஸ், முதன்மை செயலாளர் (தொழில்துறை) முருகானந்தம் ஐஏஎஸ் ஆகியோர் உடன் இருந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in