Last Updated : 01 May, 2020 08:28 AM

 

Published : 01 May 2020 08:28 AM
Last Updated : 01 May 2020 08:28 AM

திருச்சியில் கட்டுப்பாட்டில் தொற்று

திருச்சி மாநகராட்சியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 15 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி களைச் சேர்ந்த 2.20 லட்சம் பேர் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு, அப்பகுதிகள் தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் முதல் முதலாக ஏப்.4-ம் தேதிதான் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பி யவர்கள்.

அதைத்தொடர்ந்து, ஏப்.6-ல் 13 பேர், ஏப்.8-ல் 6 பேர், ஏப்.11-ல் 3 பேர், ஏப்.12-ல் 4 பேர், ஏப்.17-ல் 3 பேர், ஏப்.20-ல் 4 பேர், ஏப்.22-ல் ஒருவர் என இதுவரை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 51 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. குறிப்பாக, ஏப்.22-ம் தேதிக்குப் பிறகு யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை.

மாநகரில் 26 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட் டுக்குச் சென்ற 117 பேரில் 67 பேர் திருச்சி மாநகராட்சிப் பகுதி யில் வசிக்கின்றனர். இந்த 67 பேருக்கும், இவர்களுடன் தொடர்பில் இருந்த 87 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டதில், டெல்லி சென்று திரும்பியவர்களில் 21 பேருக்கும், இவர்களுடன் தொடர்பில் இருந்த 87 பேரில் 5 பேருக்கும் என திருச்சி மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 51 பேரும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிகிச்சை முடிந்து ஏப்.16-ல் 29 பேர், ஏப்.21-ல் 6 பேர், ஏப்.23-ல் 7 பேர், ஏப்.28-ல் 3 பேர் என இதுவரை 45 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். எஞ்சிய 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில், திருச்சி மாநகரைச் சேர்ந்த 26 பேரும் அனுப்பப்பட்டுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், திருச்சி மாநகரில் தற்போது கரோனா தொற்றுடன் இருப்பவர்கள் யாருமில்லை என்ற நல்ல நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் மொத்த முள்ள 65 வார்டுகளில் உள்ள 2.35 லட்சம் வீடுகளில் 9.7 லட்சம் பேர் வசிக்கின்றனர். திருச்சி மாநக ராட்சியில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரின் வசிப்பிடங்கள் 15 வார்டுகளில் வருகின்றன.

7 கட்டுப்பாட்டுப் பகுதிகள்

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் நகரின் அமைப்பு ஆகியவற்றுக்கேற்ப இந்த 15 வார்டு பகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 7 தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளாகஅறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 7 மண்டலங்களிலும் உள்ள55,000 வீடுகளில் வசிக்கும் 2.20 லட்சம் பேர் வெளியேவர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளை சுகாதாரத் துறையினர், போலீஸார் ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திருச்சி மாநகராட்சி அலுவலர்கள் கூறியது:

திருச்சி மாநகரில் உள்ள 7 தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப் பாட்டுப் பகுதிகளில் செவிலியர்கள் அடங்கிய மாநகராட்சி சுகாதாரக் குழுவினர், போலீஸார் தினமும் ஆய்வு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அத்தி யாவசிய பொருட்கள் அனைத்தும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி மாநகரில் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் இன்றைய நிலையில் கரோனா தொற்று யாருக்கும் இல்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x