Published : 01 May 2020 08:12 am

Updated : 01 May 2020 08:12 am

 

Published : 01 May 2020 08:12 AM
Last Updated : 01 May 2020 08:12 AM

பொதுமக்களிடம் இருந்து வரும் அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்

sp-velumani

சென்னை

உள்ளாட்சிப் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து வரும் அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தியுள்ளார்.

நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன், சென்னை குடிநீர் வாரிய மோலாண் இயக்குநர் த.ந.ஹரிஹரன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.


கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் சென்னை மாநகராட்சி மற்றும் இதர 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கடந்த 19-ம் தேதி வரை 789 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் 3 லட்சத்து 203 களப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் தினசரி 3 வேளையும் தரமான உணவு தங்குதடையின்றி வழங்கப்பட வேண்டும். அம்மா உணவகங்களைில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும்.

நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்யும் போது அவர்கள் சமூக இடைவெளியுடன் வேலை செய்வதை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். கிருமிநாசினி 2 மாதத்துக்கு தேவையான அளவு இருப்பு வைக்கப்பட வேண்டும். போதிய அளவில் தெளிப்பு இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உள்ளாட்சிப் பகுதிகளில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதுடன், அப்பகுதிகளில் அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


SP velumaniஎஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தல்உடனுக்குடன் நடவடிக்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x