

கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்கள் இறைச்சி வாங்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் முண்டியடித்து கடைகளில் நின்றனர்.
இதையடுத்து இறைச்சிக் கடைகளைத் திறக்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்தன. இருப்பினும் ஆங் காங்கே இறைச்சி விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது இறைச்சி கிலோ ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் ரூ.400-க்கே கொள்முதல் செய்வதாக ஆடு வளர்ப்போர் புலம்புகின்றனர். இது குறித்து மதுரை அருகே வேடர்புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயி கூறுகையில், கோடை வறட்சியால் ஆடுகளுக்கு தீவனம், தண்ணீர் கிடைப்பதில்லை. மேய்ச்சலுக்கு நீண்ட தூரம் செல்கி றோம். வியா பாரிகள் கடையில் ஒரு கிலோ இறைச்சியை ரூ. 800 முதல் 1000 வரை விக்கிறாங்க. எங்ககிட்ட இன்னும் கிலோ 400-க்குத்தான் வாங்குறாங்க. எங்களுக்கு லாபம் இல்லை என்றார்.