

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
உழைக்கும் மக்களின் உரிமை திருநாளாம் மே தின நன்னாளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் எங்கள் உளம்கனிந்த வாழ்த்துகள். கொடிய நோய்த்தோற்றால் அல்லல்படும் இன்றைய உலகம், நாளை உற்சாகத்துடன் வீறு கொண்டு எழுந்து புதியதோர் உலகம் செய்யப்போவது உழைப்பாளர்களின் உழைப்பினால்தான்.
நிதி வழங்கும் திட்டம்
அதிமுக தொழிற்சங்க பேரவைஉறுப்பினர்களில் நலிந்த தொழிலாளர்களுக்கு மே தினத்தன்றுகுடும்பநல நிதியுதவி வழங்கும்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது தற்போது,தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் நீங்கியவுடன் நலிந்ததொழிலாளர்களுக்கு குடும்பநல நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.