Published : 01 May 2020 07:30 AM
Last Updated : 01 May 2020 07:30 AM

தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் ஒடிசா முதல்வர் பட்நாயக் ஆலோசனை

தொழிலாளர்களை சொந்த ஊர் களுக்கு அனுப்பி வைப்பது தொடர் பாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் மே 3-ம் தேதிக்கு பிற கும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் குழு வினர் உட்பட பலரும் தமிழக அர சுக்கு பரிந்துரைத்துள்ளனர். பஞ்சாப், தெலங்கானா மாநிலங்கள் ஊர டங்கை நீட்டிப்பது தொடர்பாக அறி விப்புகளை ஏற்கெனவே வெளியிட் டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை நடக்கவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

இதற்கிடையே, வெளிமாநிலங் களில் தங்கியுள்ள தங்கள் மாநில தொழிலாளர்கள், மாணவர்கள் உள் ளிட்டோரை அழைத்து வருவதற் கான நடவடிக்கைகளை மேற்கொள் ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. இதற்காக ஒருங்கிணைப்பு அதிகாரிகளை மாநில அரசுகள் நியமித்துள்ளன.

தமிழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இதில் ஒடிசாவைச் சேர்ந்தவர்களும் கணிச மாக உள்ளனர். கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வந்த இவர்களுக்கு, தற்போது உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ஒடிசா தொழிலாளர்களுக்கான வசதி கள் குறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் மத்திய பெட்ரோலி யத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழகத்தில் ஒடிசா மாநிலத்தவர்களுக்கு வழங்கப்பட் டுள்ள வசதிகள் குறித்து பழனிசாமியும், ஒடிசாவில் உள்ள தமிழர்களுக்கான வசதிகள் குறித்து நவீன் பட்நாயக்கும் தகவல்களை பரிமாறிக்கொண்டனர். இவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பது குறித்தும் ஆலோ சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒடிசாவை பொறுத்தவரை, கரோனா வைரஸ் தொற்றை மிகுந்த கவனத்துடன் கையாண்டு வருகிறது. அம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஊரடங்கும் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வரு கிறது. இது தொடர்பாகவும் இரு மாநில முதல்வர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஒடிசாவில் கரோ னாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வரிடம், நவீ்ன் பட்நாயக் விளக்கியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆலோசனையில் தலை மைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தீன் மற்றும் முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x